ஊழியர்கள் ஷாக்..! திடீரென 200க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம்..!

2017ஆம் ஆண்டு ஏஎன்எஸ் காமர்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. தங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்தல், கிடங்கு ஏற்படுத்தி தருவது, ஈகாமர்ஸ் செயல்பாடுகளை கவனித்து கொள்வது என்பன உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இந்த ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனம் வழங்கி வந்தது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மட்டுமில்லாமல் மற்ற டிஜிட்டல் முறைகளிலும் பொருட்களை விற்பனை செய்ய தேவையான உதவியை வழங்கியது.
2022 ஆம் ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. ஆனால் மூன்று ஆண்டுகளிலேயே பிளிப்கார்ட் நிறுவனம் அதனை மூட முடிவு செய்துள்ளது. இதற்கான தெளிவான காரணங்களை வெளியிடவில்லை. இருந்தாலும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தால் லாபகரமானதாக செயல்பட முடியவில்லை என்றும் இதன் காரணமாகவும் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற காரணமாகவுமே பிளிப்கார்ட் இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 200க்கும் அதிகமான ஊழியர்களும் தற்போது வேலையை இழந்துள்ளனர். இது தங்களுக்கு பேதிர்ச்சியை தருவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடைய லிங்குடின் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவன ஊழியர்கள், ஒரே ஒரு அறிவிப்பு தங்களுடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது என வேதனை தெரிவித்துள்ளனர்.வரும் 31ஆம் தேதிக்கு பின்னர் இந்த நிறுவனம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஈ-காமர்ஸ் சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும் பிளிப்கார்ட் நிறுவனம் இவர்கள் அனைவரையும் நல்ல ஒரு நிதி தொகுப்புடன் நான் வேலையை விட்டு அனுப்புவோம் என்ற உறுதியை தந்துள்ளது. தங்கள் நிறுவனத்திற்கு உள்ளே இவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர முடியுமா என முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளது.