பணியாளர்கள் ஷாக்..! 2,000 ஊழியர்களை நீக்க பிரபல நிறுவனம் முடிவு..!

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 மில்லியன் யூரோக்களை ($434 மில்லியன்) மிச்சப்படுத்தும் முயற்சியில் சுமார் 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வோடபோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட செலவுக் குறைப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் 2,000 ஊழியர்களை நீக்க வோடபோன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சேமிப்பு மற்றும் சுமார் 2,000 வேலைகளை இடமாற்றம் செய்வதன் மூலம் பணியாளர் செலவுகள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செலவுகளை குறைந்து தானியங்கி இயந்திரங்களை மேப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வோடபோன் தெரிவித்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் இது போன்ற ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.