1. Home
  2. தமிழ்நாடு

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல் , டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது  !! ஸ்டாலின் விமர்சனம்

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல் , டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது  !! ஸ்டாலின் விமர்சனம்


இது தொடர்பாக , மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ; பாரபட்சமாகவும், வேண்டிய சிலர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையிலும் விடப்பட்டுள்ள 2,000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று இந்த டெண்டர் ஊழல் குறித்து , அறப்போர் இயக்கம் அளித்த புகாரினை காணொலிக் காட்சி வாயிலாக விசாரித்த மத்திய அரசு நேற்றைய தினம் (ஜூன் 26) உத்தரவிட்டுள்ளது.

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல் , டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது  !! ஸ்டாலின் விமர்சனம்

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது. பாரத்நெட் டெண்டர் ஊழல் குறித்து திமுக அளித்த புகாரில் முகாந்திரம் இல்லை என்று முடித்து வைத்து விட்டதாக , உயர்நீதிமன்றத்தில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கில் பதிலளித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை ,

ஊழலே நடக்கவில்லை என்று, உண்மையை மறைக்க விதண்டாவாதம் செய்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரோடு சேர்த்து இன்றைக்குக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது கண்டு நடுநிலையாளர்கள் நகைக்கிறார்கள்.

வெட்கித் தலை குனிய வேண்டியவர்கள் , மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றலாம் என வீண் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். டெண்டரையே மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் ரத்து செய்திருப்பதால்,

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல் , டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது  !! ஸ்டாலின் விமர்சனம்

இதில் 'ஊழல் இல்லை; முறைகேடு இல்லை', 'மத்திய அரசு பாரத்நெட் திட்ட ஒப்பந்தப்புள்ளிகளுக்குத் தடை விதிக்கவில்லை', 'எதிர்க்கட்சித் தலைவர் இட்டுக்கட்டி பொய்யாக குற்றம்சாட்டுகிறார்' என்றெல்லாம் பச்சைப் பொய் சொன்ன தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ,

தற்போது ராஜினாமா செய்வாரா ? அல்லது பணிநீக்கம் செய்யப்படுவாரா ? முறைகேடாக டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை ? 'முகாந்திரம் இல்லை' என்று வக்காலத்து வாங்கிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை ? முதல்வர் உரிய, ஏற்கத் தகுந்த விளக்கத்தைத் தமிழக மக்களுக்கு உடனடியாகத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like