1. Home
  2. தமிழ்நாடு

SSC CGL 2025 முதற்கட்ட தேர்வு தேதி அறிவிப்பு..!

Q

2025-ம் ஆண்டுக்கான SSC CGL மொத்தம் 14,582 காலிப்பணியிடங்களுக்கு ஜூன் மாதம் வெளியாகி ஜூலை வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 13 முதல் 30 வரை முதல் கட்ட தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதனிடையே SSC மூலம் Phase 13 கடந்த ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 1 வரை நடத்தப்பட்டது. இதில் தொழில்நுட்ப கோளாறு காரணத்தினால் பலரால் தேர்வை எழுத முடியவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு சுமார் 59,000 தேர்வர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மீண்டும் தேர்வு கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்றது. இதன் காரணமாக SSC CGL தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தேர்வு எப்போது நடைபெறும் என தேர்வர்கள் காத்திக்கொண்டிருந்தனர். தற்போது புதிய தேர்வு தேதிகள் வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் 12 முதல் 26 வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு 2 கட்ட தேர்வாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்வு கணினி வழியில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் 2 கட்ட தேர்விற்கு தகுதி அடைவார்கள். அதிலும் தேர்ச்சி பெரும் நபர்களின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் வழங்கப்படும்.

தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இத்தேர்விற்கான அட்மிட் கார்டு https://ssc.gov.in/ என்ற இணையதளத்தில் விரைவில் வெளியாகும். தேர்வு 12-ம் தேதி முதல் தொடங்குவதால் விரைவில் தேர்வு நகரம் வெளியாகும். அதனைத்தொடர்ந்து, தேர்விற்கு 4 நாட்களுக்கு முன்பு அட்மிட் கார்டு வெளியிடப்படும். தேர்வர்கள் அவர்களின் பதிவு எண் மற்றும் பாஸ்வோர்டு உள்ளிட்டு அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் விவரம் இடம்பெறும். தேர்விற்கு அட்மிடு கார்டு எடுத்து செல்வது கட்டாயமாகும்.

Trending News

Latest News

You May Like