ஸ்ரீபெரும்புதூர் ரவுடி என்கவுன்ட்டர் செய்யப்படும் முன்பு காவல் நிலையத்தில் பேசிக் கொள்ளும் வீடியோ..!
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கிளாப் பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்ற ரவுடியை காவல்துறையினர் வழக்கு ஒன்றில் தேடி வந்தனர். இதையடுத்து, சோகண்டி பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விஷ்வாவைக் கைது செய்ய முயன்ற போது, கத்தியால் தலைமைக் காவலர்கள் வாசு மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதனிடையே, ரவுடி விஷ்வா என்கவுன்ட்டர் செய்யப்படும் முன்பு காவலர் ஒருவர் யாருடனோ, செல்போனில் பேசிக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. செல்போனில் பதியப்பட்ட அந்த வீடியோவில் விஷ்வாத் துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிடவா? எனக் கேட்பதும், மக்கள் மன்ற வழக்கறிஞர்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்குமே என புலம்புவதும் பதிவாகியுள்ளது.