ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ரூ. 23 கோடியில் புதிய கட்டிடம்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொளப்பாக்கம் மற்றும் கெருகம்பாக்கம் கிராம பஞ்சாயத்துகளில் நீர்வளத்துறை மூலம் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணி, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், குன்றத்தூர் வட்டம், கெருகம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்று வரும் மழைநீர், வடிநீர் கால்வாய் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து குன்றத்தூர் வட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தினை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் கு.அசோகன், கொசஸ்தலையார் வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுபணிதிலகம், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சரவண கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.