1. Home
  2. தமிழ்நாடு

இலங்கை அதிபர் வேட்பாளர் மரணம்!

W

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே செயல்பட்டு வருகிறார். இதனிடையே, இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் தற்போதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார்.

அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பிரேமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசனாயகா உள்பட 80 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதில், சுயேட்சை வேட்பாளராக புட்டலம்பு மாவட்டத்தை சேர்ந்த இட்ராஸ் முகமது இலியாசும் களமிறங்கினார். 79 வயதான முகமது இலியாஸ் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் 1990ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜப்னா தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக செயல்பட்டுள்ளார். அதன்பின்னர், தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரம் செய்துவந்த முகமது இலியாசுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது

.இதையடுத்து, அவரை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இட்ராஸ் முகமது இலியாஸ் மரணமடைந்தார்.

Trending News

Latest News

You May Like