1. Home
  2. தமிழ்நாடு

இலங்கையின் அராஜகங்கள், கைது நடவடிக்கைகள் பாஜக ஆட்சியில்தான் அளவில்லாமல் போனது - முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

1

மோடி ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீது அறிவிக்கப்படாத போர் நடைபெறுவதாகவும் அவர் தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது குறிப்பிட்டார்.

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு ஒரு துரும்பையும் எடுத்துப்போடவில்லை என்றும் முதல்வர் சாடினார்.

“எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழக மீனவர்களிடம் பாஜகவினர் வாக்கு கேட்டு வருகிறார்கள்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ராமநாதபுரம்,– தூத்துக்குடி எனப் பல்வேறு மாவட்ட மீனவர்களுக்கு இலங்கையில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

“படகுகள் பறிமுதல், படகுகள் நாட்டுடைமை, கடும் அபராதம், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது என்று தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை அறிவிக்கப்படாத ஒரு போரை நடத்துவதும் பாஜக ஆட்சியில்தான் நடக்கிறது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Trending News

Latest News

You May Like