1. Home
  2. தமிழ்நாடு

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் !



கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும் விரட்டியடிப்பதும் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

எனினும் கடந்த சில மாதங்களாக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறைந்து வந்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏராளமானோர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் !

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் மீனவர்கள் சிலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் சோகத்துடன் கரை திரும்பினர்.

newstm.in

Trending News

Latest News

You May Like