தமிழக மீனவர்கள் 23 பேர் கைது..!
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெயராஜ், ராஜா, கீதன் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகளை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
மூன்று விசைப்படகுகளிலிருந்த ஜெரோம், மரிய ரொனால்ட், சரவணன், யாகோப், டைதாஸ், டென்னிஸ், ஆனந்த், அமலதீபன், சுவிதர், கிறிஸ்துராஜா, விஜய், ஜனன், லின்கdன்,சர்மிஸ், சுதாஸ், மார்ஷல் டிட்டோ, தயாளன், தாமஸ் ஆரோக்கிய ராஜ், ஜான் பிரிட்டோ, ஜெயராஜ், சண்முகவேல், அருள், கிங்ஸ்லி ஆகிய 23 மீனவர்கள் கைது செய்யய்பட்டனர்.
இன்று காலை, யாழ்ப்பாணம் மயிலிட்டி இறங்குதளத்தில் 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 23 மீனவர்களும் ஊர்காவல் துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.