1. Home
  2. தமிழ்நாடு

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இலங்கை கப்பல் போக்குவரத்து..!

1

வாரத்தில், செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இயக்கப்படும் என்றும், குறைந்த பயணிகள் முன்பதிவு செய்திருந்ததாலும், காலநிலை மாற்றத்தாலும், கப்பல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

‘சிவகங்கை‘ என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்து. நாகை துறைமுகத்தில் இருந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு, காங்கேசன்துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடைந்தது. கப்பல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு, ஆகஸ்ட் 17- ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகையை வந்தது. தொடா்ந்து 18-ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் நாகையிலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் மொத்தமாக 123 சாதாரண இருக்கைகளும் 27 பிரீமியம் இருக்கைகளும் உள்ளன. ஜிஎஸ்டி வரியுடன் சாதாரண இருக்கைக்கு ரூ. 5 ஆயிரமும், பிரீமியம் இருக்கைக்கு ரூ. 7,500ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே துறைமுகத்திற்கு வரவேண்டும், 23 கிலோ எடையிலான உடைமைகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கப்பலில் பயணிக்க www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like