1. Home
  2. தமிழ்நாடு

இனி வாரத்தில் 3 நாள் மட்டுமே நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து..!

1

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது என பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதனைத் தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து பணிகளும் தொடங்கி முடிவடைந்தன. 

கடந்த 8-ம் தேதி நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டமும் நடந்து முடிவடைந்தது.  அதை தொடர்ந்து கடந்த 10-ம் தேதி தொடங்க இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டு 12-ம்  தேதிக்கு மாற்றப்பட்டது.  இதன் பின்னர் நிர்வாக காரணத்துக்காக மீண்டும் 14-ம் தேதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 2 முறை கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து காணொலிக்காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி நேற்று முன்தினம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.  

இந்த சூழலில், போதிய பயணிகள் முன்பதிவு செய்யவில்லை.  இதனால், கப்பல் போக்குவரத்து நேற்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இனி திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் என்று 3 நாட்கள் மட்டும் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

Trending News

Latest News

You May Like