இலங்கையில் கோர விபத்து: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்தில் 21 பேர் பலி..!
இலங்கையில் உள்ள குருணாகல் நோக்கி இலங்கை அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் 70க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். கொத்மலை பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.