சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது!

சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது!

சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது!
X

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தினர். பின்னர் நான்கு போலீஸார் மீது கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்நிலையில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை முதலில் கைது செய்த சிபிசிஐடி போலீசார், தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, ஜூலை 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


அதனைத் தொடர்ந்து நள்ளிரவு நடவடிக்கையாக எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி போலீஸார் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் விசாரணையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் உள்ளடக்கம் எனவும், அவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  சாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 5ஆவது நபரான காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை, கங்கைகொண்டான் செல்லும் வழியில் சிபிசிஐடி போலீசார் வழிமறித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து ஆய்வாளர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

newstm.in

Next Story
Share it