1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீகம் அறிவோம் : இன்று சனிக்கிழமை + ஏகாதசி... இந்த நாளை யாரும் தவறவிடாதிங்க..!

1

வாழ்வில் நிம்மதியே அனைவரும் தேடும் செல்வம். பொருட்செல்வம் குறைவாக இருந்தால்கூட நிம்மதியாக வாழ்ந்துவிடலாம். ஆனால் எதிரி என்று ஒருவன் இருந்தால்கூட நம் நிம்மதி போய்விடும். எப்போது நமக்கு அவனால் ஆபத்து வருமோ என்கிற கவலை வாட்டும். சில நேரங்களில் நம் எதிரிகள் யார் என்பதே நமக்குத் தெரியாது. கூட இருப்பவரே குழி பறிப்பார். நம் முன்னேற்றங்களைத் தடை செய்வார். நம்மைத் தவறான பாதையில் நடத்திச் செல்வார். அப்படிப்பட்டவரை நாம் அடையாளம் காண்பது கடினம். எனவே நேர்முக எதிரிகளோ மறைமுக எதிரிகளோ யாராக இருந்தாலும் அது ஆபத்தே.

கடவுள் நம்மோடு இருந்தால் யார் நமக்கு எதிராகச் செயல்பட முடியும் என்பதுதான் பொருள். காக்கும் கடவுள் விஷ்ணு. அவரை வழிபட்டால் அவர் நம்மைக் காப்பார் என்பதுவே ஞானநூல்கள் சொல்லும் உண்மை. விஷ்ணுவை நமக்கான பலமாக, படையாக காக்கும் சக்தியாக மாற்றிக்கொண்டால் நமக்குத் துன்பங்கள் நேராது.


பெருமாளுக்கு உகந்த ஆனி மாத தேய்பிறை ஏகாதசி திதியானது நாளைய தினம் வரவிருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால், இன்றைய  தினம் 21-06-2025 சனிக்கிழமையோடு இந்த ஏகாதசி திதி சேர்ந்து வந்திருக்கிறது.

இந்த நாளில் அஸ்வினி நட்சத்திரமும் சேர்ந்திருக்கிறது. ஆகவே உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள், தீராத நோய் நொடிக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள், இதுபோல ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால், இந்த நாளில் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம். உடல் உபாதைகளுக்கு நல்லதொரு தீர்வை கொடுக்கக்கூடிய நட்சத்திரம் இந்த அஸ்வினி நட்சத்திரம். பெருமாளை வேண்டி வெறும் வயிற்றில் துளசி தீர்த்தத்தை பருகுங்கள்.

எனக்கு இருக்கும் நோய் நொடி தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால், உங்களுடைய நோய் நொடி பிரச்சனைகளும் கூடிய விரைவில் படிப்படியாக குறைய துவங்கும். இந்த நாளில் மருந்து சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை மருத்துவரிடம் சென்று கேட்கலாம். பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்கும். இது முதல் ஆன்மீக ரீதியான பரிகாரம்.


பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், குழப்பங்கள் தீர வேண்டும் என்றால் இன்றைய தினம் பெருமாளை எப்படி வழிபாடு செய்வது? 

காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் பெருமாளுக்கு முன்பு ஒரு நெய்தீபம் ஏற்றி வையுங்கள். பெருமாள் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பது போல உங்களுடைய மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த ஊஞ்சல் சேவையை பார்த்துக்கொண்டே “ஓம் தாமோதராய நமஹ ! ஓம் தாமோதராய நமஹ ! ஓம் தாமோதராய நமஹ ! என்ற மந்திரத்தை மனதார சொல்லி இரண்டு கைகளிலும் துளசி இலைகளை ஏந்தி அந்த துளசி இலைகளை பெருமாளுக்கு அர்ச்சனை செய்து பாருங்கள்.


உங்கள் கை நிறைய செல்வ வளம் செல்வக் கடாட்சம் கொழிக்க துவங்கிவிடும். மனக்குழப்பம் தீரும். மன சஞ்சலம் தீரும். உங்கள் வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக செல்லும். இன்றைய தினம் அதிசக்தி வாய்ந்த சனிக்கிழமை சேர்ந்து வரக்கூடிய இந்த ஏகாதசியை யாரும் தவறவிடாதிங்க.


 

Trending News

Latest News

You May Like