1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீகம் அறிவோம் : எதைத் தொட்டாலும் தோல்வியா? தடைகள் ஏற்படுகிறதா? நரசிம்மரை இந்த நாளில் இப்படி வழிபடுங்கள்..!

1

ஒரு முறை வெற்றி ஏற்படாமல் தோல்வி அடைந்து விட்டால் பரவாயில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்யும் பொழுது ஒரு சிலருக்கு தோல்விகள் மட்டுமே வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் நரசிம்மரை எந்த முறையில் வழிபாடு செய்தால் அவர்களுடைய தோல்விகள் நீங்கி வெற்றிகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

*வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க*

நரசிம்மர் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடு. நரசிம்மரை யார் ஒருவர் முழு மனதோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களிலிருந்தும் நரசிம்மர் காப்பாற்றுவார். மேலும் எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் இருந்து காப்பாற்றக்கூடிய ஒரு அற்புதமான தெய்வம் ஆகவும் நரசிம்மர் திகழ்கிறார். அப்படிப்பட்ட நரசிம்மரை எந்த நாளில் எப்படி வழிபட்டால் தோல்விகள் நீங்கி வெற்றிக்கு மேல் வெற்றி உண்டாகும் என்பதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமாக திகழ்வது சுவாதி நட்சத்திரம். சுவாதி நட்சத்திர நாளன்று நரசிம்மரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் முற்றிலும் தீரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே ஸ்வாதி நட்சத்திரத்தில் தான் வெற்றிக்கு மேல் வெற்றிகள் கிடைப்பதற்கும் நாம் நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும்.

அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். தங்களுக்கு எத்தனை வயது இருக்கிறதோ அத்தனை எண்ணிக்கையில் நெய் தீபத்தை லட்சுமி நரசிம்மருக்கு ஏற்ற வேண்டும். உதாரணமாக தங்களின் வயது 30 என்றால் 30 அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இயன்றவர்கள் தாமரை தண்டுதிரி போட்டு கூட தீபம் ஏற்றலாம். பிறகு லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை மற்றும் தாமரை பூக்களை வாங்கித் தர வேண்டும்.

அதேபோல் வீட்டிலேயே பானகத்தை தயார் செய்து எடுத்துக்கொண்டு போக வேண்டும். அந்த பானகத்தை லஷ்மி நரசிம்மருக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். நம்முடைய பெயர் நட்சத்திரத்தை கூறி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு நம்முடைய வேண்டுதலை நரசிம்மரிடம் முன் வைத்து வழிபாட்டை நிறைவு செய்த பிறகு பானகத்தை ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய சுவாதி நட்சத்திர நாள் அன்று தீபமேற்றி நரசிம்மரை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இதுவரை அடைந்த தோல்விகள் அனைத்தும் விலகி வெற்றிகளும் அதிர்ஷ்டமும் அவர்களை தேடி வர ஆரம்பிக்கும்.


சக்தி வாய்ந்த இந்த நரசிம்மர் வழிபாட்டை முழுமனதோடு செய்து இதுவரை ஏற்பட்ட தோல்விகள் அனைத்தையும் நீக்கி இனிமேல் வெற்றிக்கு மேல் வெற்றியை அடைவோம்

Trending News

Latest News

You May Like