1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீகம் அறிவோம் : எந்த ராசியினர் எந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் தெரியுமா ?

1

எந்த ராசி, நட்சத்திரத்திற்கு எந்த ஆலயம் செல்ல வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

12 ராசிகளை நம் முன்னோர்கள் நெருப்பு, நிலம், நீர், காற்று என நான்கு வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 3 ராசிகள் என 4 பிரிவில் தலா 3 ராசிகள் உள்ளன.

நெருப்பு ராசிகள் :- மேஷம், சிம்மம்,தனுசு
நிலம் ராசிகள் :- ரிஷபம், கன்னி,மகரம்
காற்று ராசிகள் :- மிதுனம், துலாம், கும்பம்
நீர் ராசிகள் :- கடகம் , விருச்சிகம் , மீனம்

அதே போல சூரியன், சந்திரன் என நவகிரகங்களில் எந்த கிரகம் வலிமையாக இருக்கின்றதோ, எதன் ஆதிக்கம் அதிகம் உள்ளதோ அதைக் குறிப்பது தான் ராசி.

நமக்குரிய ராசி, லக்கினத்திற்குரிய கோயிலுக்கு சென்று வர அதற்கான நற்பலனைப் பெற்றிட முடியும்.

உங்களுக்கு லக்கினம் எந்த ராசியைக் குறிக்கின்றதோ அதற்குரிய அந்த லக்கினத்துக்கு உண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோசம் நிவர்த்தியாகும்.

பஞ்சபூத ஸ்தலங்கள்;

  • மண் (நிலம்) -காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில் (Ekambareswarar Temple)
  • நீர்-திருவானைக்காவல் - ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் திருவானைக்காவல் (Jambukeshwarar Temple, Thiruvanaikaval)
  • நெருப்பு- அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை (Arunachaleswara Temple)
  • காற்று -ஸ்ரீ காளஹஸ்தி திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் (SriKalahasti temple)
  • ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில் (Nataraja Temple, Chidambaram)

எடுத்துக்காட்டாக மிதுனம் காற்று ராசியைச் சேர்ந்தது. நீங்கள் மிதுன லக்கினம் என்றால், காற்று ராசிக்குரிய ஸ்ரீ காளஹஸ்தி ஆலயத்திற்கு உங்கள் பிறந்த நட்சத்திர நாளன்று சென்று வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

சனி தொழில் காரகன் என அழைக்கப்படுபவர். சனி எந்த ராசியில் அமர்ந்திருக்கிறாரோ, அந்த ராசிக்குரிய கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. அப்படி செய்தால் உங்களின் தொழில், வியாபார முன்னேற்றம் ஏற்படும்.

அதே போல உங்களுக்கு என்ன தசா நடக்கின்றதோ, அந்த தசாநாதனுக்குரிய ராசி மற்றும் அதன் அதிபதி எந்த ராசியில் இருக்கிறதோ அந்த கோயில் சென்று வழிபட்டு வருவது சிறப்பு.இப்படி பஞ்சபூத கோயில்களுக்கு பின்னால் இவ்வளவு சூட்சுமம் இருக்கின்றன.

Trending News

Latest News

You May Like