ஆன்மீகம் அறிவோம் : உங்க ராசிப்படி நீங்க எந்த முருகர் கோவிலுக்கு போக வேண்டும் தெரியுமா ?

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். உங்களுடைய பூஜை அறையில் திருச்செந்தூர் முருகப் பெருமானின் திரு உருவப்படத்தை வைத்து தினமும் வழிபாடு செய்யுங்கள். ஒருமுறை திருச்செந்தூருக்கு சென்று முருகப் பெருமானை வழிபாடு செய்துவர உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். பூஜையறையில் திருப்பரங்குன்றத்து முருகப்பெருமானை வைத்து வழிபாடு செய்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஒருமுறை குடும்பத்தோடு திருப்பரங்குன்றத்து முருகனை சென்று தரிசனம் செய்து வந்தால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பழமுதிர்ச்சோலை முருகப் பெருமானை பூஜை அறையில் வைத்து தினமும் வழிபாடு செய்து வர வேண்டும். ஒருமுறை குடும்பத்துடன் பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு வந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு திருத்தணி முருகப்பெருமான் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுப்பார். உங்கள் வீட்டு பூஜை அறையில் திருத்தணி முருகப்பெருமானின் புகைப்படத்தை வைத்து தினமும் அவர் நாமத்தை சொல்லி வழிபாடு செய்து வர குடும்பத்திற்கு நன்மை நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பழனி முருகப்பெருமான் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுப்பார். உங்கள் வீட்டு பூஜை அறையில் பழனி முருகப் பெருமானை வைத்து வழிபாடு செய்து வர கஷ்டங்கள் தீரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பழமுதிர்ச்சோலை முருகப் பெருமானை வழிபாடு செய்துவர வேண்டும். குடும்பத்தோடு ஒருமுறை பழமுதிர்ச்சோலை முருகனை தரிசனம் செய்து விட்டு வந்தால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் திருப்பரங்குன்றத்து முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள். பூஜை அறையில் திருப்பரங்குன்றத்து முருகனின் திருவுருவப் படத்தை வைத்து தினமும் வழிபாடு செய்து வர உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருச்செந்தூர் முருகப் பெருமான் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுப்பார். தினமும் காலையில் எழுந்து முருகா முருகா என்ற நாமத்தை சொல்லி திருச்செந்தூர் முருகனை மனதில் நிறுத்த உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஒரு முறை சுவாமிமலைக்கு சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீரும். அங்கிருந்து வரும்போது சின்ன முருகரின் திரு உருவப்படத்தை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து தினம்தோறும் வழிபாடு செய்துவர அதிர்ஷ்டம் கொட்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பழனி முருகப் பெருமான் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுப்பார். ஒருமுறை பழனிக்குச் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்யவும். அங்கிருந்து சின்னதாக பழனி முருகரின் திருவருவப்படத்தை வாங்கி வந்து பூஜை அறையில் வைத்தால் உங்களுக்கு நன்மை நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபாடு செய்யவும். பூஜை அறையில் இவரின் திருவுருவப்படத்தை வைத்து தினம் தினம் வழிபாடு செய்து வர உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சுவாமிமலை முருகனை வழிபாடு செய்துவர அதிர்ஷ்டம் கிடைக்கும். சுவாமி மலையில் இருந்து வரும் போது ஒரு சின்ன முருகரின் திருவருவப்படத்தை வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய கஷ்டங்கள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.