1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீகம் அறிவோம் : 64 சிவ வடிவங்களும் அதன் விளக்கமும்..!

1

இலிங்கோத்பவ மூர்த்தி – இலிங்கமாக தோன்றிய வடிவம்

முகலிங்க மூர்த்தி – இலிங்கத்தில் சிவமுகம் உள்ள வடிவம்

சதாசிவ மூர்த்தி – ஐந்து முகத்துடன் உள்ள வடிவம்

மகா சதாசிவ மூர்த்தி – இருபத்தியைந்து முகத்துடன் உள்ள வடிவம்

உமாமகேஸ்வர மூர்த்தி – உமாமகேஸ்வர மூர்த்தி

சுகாசன மூர்த்தி – நல்லிருக்கை நாதர்

உமேச மூர்த்தி – உமையுடன் நின்றருளும் வடிவம்

சோமாஸ்கந்த மூர்த்தி – உமை மற்றும் கந்தன் உடனாகிய வடிவம்

சந்திரசேகர மூர்த்தி – பிறை சூடியுள்ள வடிவம்

இடபாரூட மூர்த்தி – விடையேறி – காளையின் மீது அமர்ந்திருக்கும் வடிவம்

இடபாந்திக மூர்த்தி – அறவெள் விடைக்கு அருளிய வடிவம்

புஜங்கலளித மூர்த்தி – பாம்புகளைக் காத்து அருளிய வடிவம்

புஜங்கத்ராச மூர்த்தி – பாம்புகளை அடக்கிய வடிவம்

சந்த்யான்ருத்த மூர்த்தி – மாலைநேர நடன வடிவம்

சதாநிருத்த மூர்த்தி – எஞ்ஞான்றும் நடனமாடும் வடிவம்

சண்டதாண்டவ மூர்த்தி – காளி காண ஆடிய நடன வடிவம்

கங்காதர மூர்த்தி – கங்கையணிந்த வடிவம்

கங்காவிசர்ஜன மூர்த்தி – முடியிலிருந்து கங்கையை விடுவிடுக்கும் வடிவம்

திரிபுராந்தக மூர்த்தி – முப்புரமெரி

செய்த வடிவம் – முப்புரமெரித்த வடிவம்

கல்யாணசுந்தர மூர்த்தி – மணவழகர் வடிவம்

அர்த்தநாரீஸ்வர மூர்த்தி – உமைபங்கன் – உமையை இடப்பாகமாகக் கொண்டவன்

கஜயுக்த மூர்த்தி – காயாசுரனை கொன்ற வடிவம்

ஜ்வாரபக்ன மூர்த்தி – சுரம் நீக்கும் வடிவம்

சார்த்தூலஹர மூர்த்தி – புலியினை அழித்த வடிவம்

பாசுபத மூர்த்தி – அருசுனனுக்கு பாசுபதக் கணையை அளித்த வடிவம்

கங்காள மூர்த்தி – வாமனை கொன்று முதுகெழும்பினைக் கொண்ட வடிவம்

கேசவார்த்த மூர்த்தி – மாலொரு பாகர் வடிவம்

பிச்சாடன மூர்த்தி – பலிகொள் செல்வர் வடிவம்

சரப மூர்த்தி – சரப வடிவம்

சடேச அனுக்ரஹ மூர்த்தி – சண்டேசருக்கு அருளிய வடிவம்

தட்சிணாமூர்த்தி – தென்முகக் கடவுள்

யோக தட்சிணாமூர்த்தி – தவநிலைத் தென்முகக் கடவுள்

வீணா தட்சிணாமூர்த்தி – வீணையேந்திய தென்முகக் கடவுள்

காலந்தக மூர்த்தி – காலனைக் கொன்ற வடிவம்

காமதகன மூர்த்தி – காமனை எரித்த வடிவம்

இலகுளேஸ்வர மூர்த்தி – புவனங்கள் தோறும் எழுந்தருளும் வடிவம்

பைரவ மூர்த்தி – ருத்திர வடிவம்

ஆபத்தோத்தரண மூர்த்தி – முனிவர்களின் இடர் களைந்த வடிவம்

வடுக மூர்த்தி – முண்டாசுரனை கொன்ற வடிவம்

சேத்திரபால மூர்த்தி – ஊழிக்காலத்தில் உலகைக் காத்த வடிவம்

வீரபத்ர மூர்த்தி – நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய வடிவம்

அகோர மூர்த்தி – சச்தந்துவை கொன்ற வடிவம்

தட்சயஞ்யஷத மூர்த்தி – தக்கன் வேள்வியை தகர்த்த வடிவம்

கிராத மூர்த்தி – வேட்டுருவர்

குரு மூர்த்தி –மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி வடிவம்

அசுவாருட மூர்த்தி – குதிரையேறு செல்வர்

கஜாந்திக மூர்த்தி – ஐராவதத்திற்கு அருளிய வடிவம்

சலந்தரவத மூர்த்தி – சலந்தரனைக் கொன்ற வடிவம்

ஏகபாதத்ரி மூர்த்தி – ஒற்றை

திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்

திரிபாதத்ரி மூர்த்தி – மூன்று திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்

ஏகபாத மூர்த்தி – ஒற்றை திருவடியுடைய வடிவம்

கௌரிவரப்ரத மூர்த்தி – உமைக்கு பொன்னிறம் அளித்த வடிவம்

சக்கரதான மூர்த்தி – திருமாலுக்கு சக்கரம் அளித்த வடிவம்

கௌரிலீலாசமன்வித மூர்த்தி – உமையுடன் கேளிக்கைகள் புரிந்த வடிவம்

விசாபகரண மூர்த்தி – நீலகண்டர்

கருடன் அருகிருந்த மூர்த்தி – கருடனுக்கு அருளிய வடிவம்

பிரம்ம சிரச்சேத மூர்த்தி – பிரம்மாவின் தலையை கொய்த வடிவம் ( அயனின் ஆணவச் சிரமறுத்த வடிவம்)

கூர்ம சம்ஹார மூர்த்தி – கூர்ம வடிவ திருமாலை அடக்கிய வடிவம்

மச்ச சம்ஹார மூர்த்தி – மச்ச வடிவ திருமாலை அடக்கிய வடிவம்

வராக சம்ஹார மூர்த்தி – வராக வடிவ திருமாலை அடக்கிய வடிவம்

இலிங்க மூர்த்தி – அருவுருவ நிலை

பிரார்த்தனா மூர்த்தி – உமையின் ஊடலைத் தணித்த வடிவம்

இரத்த பிட்சா பிரதான மூர்த்தி – தேவர்களின் செருக்கினை அடக்கிய வடிவம்

சிஷ்ய பாவ மூர்த்தி – முருகனிடம் பிரணவப் பொருளைக் கேட்க மாணவனாக மாறிய வடிவம்

Trending News

Latest News

You May Like