ஆன்மீகம் அறிவோம் : சனி தோஷத்தை நீக்கும் ஆடி சனிக்கிழமை வழிபாடு..!
சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு சில தெய்வங்கள் உறுதுணையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட தெய்வங்களுள் மிகவும் முக்கியமான தெய்வங்களாக பிள்ளையார், ஆஞ்சநேயர் மற்றும் காலபைரவர் திகழ்கிறார். சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்யும்பொழுது சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும் என்று கூறப்படுகிறது. அதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமையில் நாம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தோம் என்றால் சனி தோஷம் முற்றிலும் நீங்கி சனியின் அருள் பார்வை நம் மீது படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆஞ்சநேயர் வழிபாட்டை பற்றி நான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.
ஆடி மாதத்தில் வரக்கூடிய முதல் சனிக்கிழமை என்பது ஜூலை மாதம் 19ஆம் தேதி வருகிறது. அன்றைய நாளில் அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். நெய் தீபம்ஏற்றி வைத்து ஆஞ்சநேயரை 11 முறை வலம் வந்து அவருக்கு முன்பாகவோ அல்லது அந்த ஆலயத்தில் ஏதாவது ஒரு இடத்திலோ அமர்ந்து கொண்டு ஆஞ்சநேயரை முழு மனதோடு நினைத்துக் கொண்டு பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். இப்படி ஆடி சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயர் ஆலயத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் அருளால் சனி தோஷம் முற்றிலும் விலகும். ஆலயத்திற்கு செல்ல இயலாது என்பவர்கள் வீட்டிலேயே ராகுகால எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு ஆஞ்சிநேயரின் படம் இருக்கும் பட்சத்தில் அவருக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை 11 முறை கூறலாம்.
மந்திரம் : “ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்”
மிகவும் எளிமையான ஆஞ்சநேயரின் மந்திரத்தை முழுமனதோடு நினைத்து முழு மனதோடு யார் ஒருவர் கூறுகிறார்களோ அவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருளால் சனி தோஷம் முற்றிலும் நீங்கும்