ஆன்மீகம் அறிவோம் : சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் பரிகாரத் தலங்கள்!
அருள்மிகு சுத்த ரத்தினேஸ்வரர் ஆலயம், ஊட்டத்தூர்
கும்பகோணத்தில் இருந்து 85 கி.மீ
இறைவன் - சுத்தரத்தினேஸ்வரர்
அம்பாள் - அகிலாண்டேஸ்வரி
சிறப்பு - உலகின் அனைத்து தீர்த்தங்களும் ஊற்றெடுத்த ஊர் இது.
பரிகாரம் - சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், இங்கு ஈசனை வழிபட்டு வெட்டிவேர் ஊறிய தீர்த்தத்தைப் பருகினால் சர்க்கரை நோய் விலகும் என்பது ஐதீகம்.
அருள்மிகு வைத்தீஸ்வரன் ஆலயம், வைத்தீஸ்வரன் கோவில்
கும்பகோணத்தில் இருந்து 51 கி.மீ
இறைவன் - வைத்தீஸ்வரன்
இறைவி - தையல்நாயகி
சிறப்பு - செவ்வாய்க்கான பரிகாரத் தலம். இங்குள்ள முருகப்பெருமான் முத்துக்குமார சுவாமி என்ற பெயரில் விசேஷமானவர்.
பரிகாரம் - சகல நோய்களுக்கும் மருந்தாக இங்கு தரப்படும் திருச்சாந்து உருண்டை சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வெண்ணி கரும்பேசுவரர் ஆலயம், கோயில்வெண்ணி
கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ
இறைவன் - கரும்பேசுவரர்
அம்பாள் - சவுந்தர நாயகி
சிறப்பு - தேவார மூவரும் பாடிய தலம் இது.
பரிகாரம் - சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், வெள்ளை சர்க்கரையும் ரவையும் கலந்த கலவையை வெண்ணி கரும்பேசுவரர் பிராகாரத்தில் போட்டு வலம் வர வேண்டும். அதை எறும்புகள் சாப்பிட்டு விடுவதால், சர்க்கரை காணாமல் போவதைப் போல, நம்முடைய சர்க்கரை நோயும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு பரசுநாதர் ஆலயம், முழையூர்
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ
இறைவன் - பரசுநாதர்
இறைவி - ஞானாம்பிகை
சிறப்பு - திரிதியை நாள்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது
பரிகாரம் - உணவு தொடர்பான எந்த வியாதியையும் குணமாக்கும் ஈசன் இவர். முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு அர்ச்சித்தால் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை.
அருள்மிகு மாரியம்மன் ஆலயம், நத்தம்
கும்பகோணத்தில் இருந்து 199 கி.மீ
இறைவி - மாரியம்மன்
சிறப்பு - சுயம்பு வடிவான தேவி இவள்.
பரிகாரம் - சர்க்கரை நோய் உடையவர்கள், மாரியம்மனை வணங்கி வழிபட்டு கரும்புத் தொட்டில் கட்டி கோயிலைச் சுற்றி வந்து வணங்கினால் நிவாரணம் பெறுவார்கள்.
இத்திருத்தலங்களுக்குச் சென்று, பிரார்த்தனைகளை நிறைவேற்றி இறைவன் அருளால் உடல் நலம் பெற்று சுகமான வாழ்க்கையை வாழ்வோம்!