1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீகம் அறிவோம் : 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரம்..!

1

12 ராசிக்காரர்களுக்கும் உண்டான ஒரு வெற்றிலை பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்கள் ராசி படி பூஜை அறையில் வெற்றிலையை எந்த கிழமையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அந்த வெற்றிலைக்கு மேல் எந்த பொருளை வைத்து வழிபாடு செய்தால் உங்களுக்கான அதிர்ஷ்ட யோகம் அடிக்கும் என்பதை பற்றிய ஜோதிடம் சார்ந்த ஒரு தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

மேஷம் மேஷ ராசிக்காரர்களே செவ்வாய்க்கிழமை பூஜை அறையில் வெற்றிலையை வைத்து, அதன் மேலே ஒரு மாம்பழம் வைத்து, முருகனை வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் வேற லெவல் திருப்புமுனைகள் வரும். நீங்க ஓஹோன்னு வாழ துவங்கி விடுவீர்கள்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை வெற்றிலைக்கு மேலே இரண்டே இரண்டு மிளகு வைத்து, ராகு பகவானை வழிபாடு செய்ய வேண்டும். வழிபாட்டை முடித்துவிட்டு அந்த இரண்டு மிளகை நீங்கள் சாப்பிட உங்கள் வாழ்நாள் பிரச்சனைகள் விலகும்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் புதன்கிழமை வெற்றிலையின் மேல் இரண்டு வாழைப்பழம் வைத்து, விநாயகரை வணங்கிட உங்களுடைய கஷ்டங்கள் விலகும். வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு வாழைப்பழத்தை பிரசாதமாக சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

கடகம் கடக ராசி காரர்கள் வெள்ளிக்கிழமை வெற்றிலைக்கு மேலே மாதுளம் பழம் வைத்து அம்மன் வழிபாடு செய்து விட்டு, அந்த மாதுளம் பழத்தை சாப்பிட உங்களுடைய மன தைரியம் அதிகரிக்கும். வாழ்நாளில் நன்மை நடக்கும்.

சிம்மம் சிம்மராசிக்காரர்கள் வெற்றிலையின் மேலே வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை அன்று குரு பகவானே வணங்கி, அந்த பழத்தை சாப்பிட்டு வர, உங்களுக்கான நன்மைகள் உங்களைத் தேடி வரும்.

கன்னி கன்னி ராசிக்காரர்களே வியாழக்கிழமை நீங்கள் வெற்றிலையின் மேலே உலர் திராட்சை வைத்து சித்தர் வழிபாடு செய்ய உங்கள் வாழ்நாள் துன்பங்கள் விலகும். வழிபாட்டை முடித்துவிட்டு அந்த பிரசாதத்தை சாப்பிட்டுக் கொள்ளலாம். (உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு சித்தரை தேர்ந்தெடுத்து வழிபடலாம்).

துலாம் துலாம் ராசிக்காரர்களே நீங்கள் வெள்ளிக்கிழமை வெற்றிலையின் மேலே இரண்டு ஏலக்காய்களை மகாலட்சுமி வழிபாடு செய்ய உங்களுக்கான அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். ஏலக்காய்களை அப்படியே சாப்பிடலாம். பாலில் கலந்தும் சாப்பிடலாம்.

விருச்சிகம் விருச்சிக ராசி காரர்கள் செவ்வாய் கிழமை வெற்றிலையின் மேலே இரண்டு பேரிச்சம் பழங்களை வைத்து துர்க்கை அம்மனை வழிபாடு செய்து அதை பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம்.

தனுசு தனுசு ராசிக்காரர்கள் திங்கட்கிழமை வெற்றிலையின் மேலே கற்கண்டு வைத்து ஈசனை வழிபாடு செய்ய உங்கள் துன்பங்கள் விலகும். வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு கல்கண்டு பிரசாதமாக உண்ணவும்.

மகரம் மகர ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை வெற்றிலையின் மேலே நாட்டு சர்க்கரை, பனவெல்லம் இதுபோல பொருட்களை வைத்து அம்மனை வழிபாடு செய்து பிறகு அதை பிரசாதமாக எடுத்துக் கொள்வது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

கும்பம் கும்ப ராசிக்காரர்கள் வெற்றிலையின் மேலே, இரண்டு முந்திரி பருப்புகளை வைத்து, சனிக்கிழமை பைரவரை வழிபாடு செய்ய உங்கள் துன்பங்கள் விலகும். வழிபாட்டை முடித்துவிட்டு முந்திரி பருப்புகளை பிரசாதமாக சாப்பிடலாம்.

மீனம் மீன ராசிக்காரர்கள் வெற்றிலையின் மேலே, வாழைப்பழம் வைத்து, செவ்வாய்க்கிழமை முருகனை வழிபாடு செய்ய உங்களுடைய கஷ்டங்கள் விலகும்.

Trending News

Latest News

You May Like