1. Home
  2. தமிழ்நாடு

விந்தணு செலுத்தி பிறந்த குழந்தை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

விந்தணு செலுத்தி பிறந்த குழந்தை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


பெண் ஒருவர் ஒற்றை பெற்றோராக இருக்கும் பட்சத்தில் தாயின் பெயர் மட்டுமே பிறப்பு சான்றிதழில் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் விந்தணு கொடையாளரின் உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற குழந்தையுடைய தந்தை பெயர் என்னும் இடத்தை பூர்த்தி செய்ய சொல்லி அந்தப் பெண் கட்டாயப்படுத்தப்பட்டார்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்ட போது விந்தணு கொடையளித்தவரின் பெயரை இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அதில், ஒற்றை பெற்றோராக இருக்கும் பட்சத்தில் தாயின் பெயர் மட்டுமே பிறப்பு சான்றிதழில் பதிவு செய்தால் போதுமானது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில், தந்தையை இழந்த குழந்தை அல்லது தந்தையை பிரிந்து தாயின் பாதுகாப்பில் மட்டும் வளரும் குழந்தை, தந்தையுடைய வருமானம் இன்றி தாயின் வருமானத்தில் மட்டுமே வளரும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும் என தெரிவித்துள்ளார்.

தந்தையுடைய பெயர் அல்லது முதலெழுத்து சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை எனவும், பள்ளிச்சேர்க்கை மற்றும் சொத்து பதிவு ஆகியவற்றிற்கும் இது பொருந்தும் என அதிரடி தீர்ப்பினை வழங்கி உள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like