கும்பமேளா செல்ல சிறப்பு ரயில்..! கட்டணம் எவ்வளவு தெரியுமா ?
காசியில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை கும்பமேளா நடைபெறுகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்த விழாவில் காசி கங்கை நதியில் புனித நீராட பொது மக்கள் விரும்புவார்கள்.
இதுகுறித்து இந்திய ரயில்வே சார்பில் வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயணிகளின் வசதிக்காக நெல்லையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சை வழியாக காசிக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி சிறப்பு சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும். அங்கிருந்து காலை 6 மணிக்கு காசிக்கு புறப்படும். பிப்ரவரி 7ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு பனாரஸ் சென்றடைகிறது.
இதையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி மாலை கங்கா ஆரத்தியை பார்த்து விட்டு பிப்.8 ஆம் தேதி முழுவதும் பிரக்யராஜ் பகுதியில் சுற்றுலா அழைத்து செல்லப்படும். அடுத்த நாளான பிப்.9 ஆம் தேதி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சாரநாத் கோயில்களுக்கு சுற்றுலா செல்லுதல், பிப் 10 அயோத்தியா சரயு நதி மற்றும் ராமஜென்ம பூமி கோயில் வழிபாடு செய்துவிட்டு அன்று இரவு நெல்லையில் இருந்து புறப்படும்படி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சுற்றுலா ரயில் பிப்ரவரி 13 ஆம் தேதி அதிகாலை 2.50 மணிக்கு மதுரைக்கு வரும். அங்கிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு செல்லும். இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த 12 நாள் சுற்றுலாவுக்கு ரயிலில் பயணம் செய்ய கட்டணம், தங்குமிடம், கைடுக்கான கட்டணம், பாதுகாப்பு அலுவலர், உணவு வகைகள், சுற்றுலா போக்குவரத்து உள்ளிட்டவை உள்பட ஒரு நபருக்கு ரூ 26,850 வசூலிக்கப்படுகிறது.
குளிர்சாதன ரயில் பெட்டி பயணம், சிறப்பு வசதிகளுக்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ 38,470 மற்றும் ரூ 47,900 வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயிலில் பயணம் செய்ய முன்பதிவுக்கு 8287931977 மற்றும் 8287932122 என்ற அலைபேசி எண்களில் மதுரை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.