இன்று முதல் திருவனந்தபுரம் - தில்லி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருவனந்தபுரத்திலிருந்து தலைநகர் டெல்லிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பிற்பகல் 11.15 மணிக்கு புறப்பட்டு அன்றிலிருந்து மூன்றாவது நாள் மதியம் 1.45 மணிக்கு தலைநகர் டில்லியை சென்றடையும். இந்த ரயில் செப்டம்பர்30ம் தேதி முதல் தொடங்கப்படும்.
அதேபோல் தினமும் முற்பகல் 11.35 மணிக்கு புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு மூன்றாவது நாள் பிற்பகல் 3.15 மணிக்கு திருவனந்தபுரத்தை மறுமார்க்கமாக வந்தடையும். தலைநகரில் இந்த சேவை அக்டோபா் 3ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
மேலும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.