1. Home
  2. தமிழ்நாடு

நெல்லை-ஷாலிமார் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

1

திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தா ஷாலிமர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, "வண்டி எண். 06087 திருநெல்வேலி-ஷாலிமார் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலியில் இருந்து ஜூலை 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9 மணிக்கு ஷாலிமார் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ஷாலிமார் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் வண்டி எண். 06088 ஷாலிமாரிலிருந்து ஜூலை 20 மற்றும் 27 ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

இந்த ரயில்களில் 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 17 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 ரயில் மேலாளர் பெட்டியுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, சாமல் கோட், துவ்வாடா, சிமாச்சலம் வடக்கு, பென்டுர்டி, கோட்ட வலசா, விஜயநகரம், ஸ்ரீ கா குளம் ரோடு, பலாசா, பிரம்மாபூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், ஜஸ்பூர் கியான்ஸ்ஹர், பட்ரக், பாலேஸ்வர், கரக்பூர், சந்தர காச்சி ஆகிய ரயில் நிலையங்கள் நின்று செல்லும்.
 

Trending News

Latest News

You May Like