1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணி... நகராட்சி ஆணையாளருக்கு சிறப்பு கேடயம்!

கொரோனா தடுப்பு பணி... நகராட்சி ஆணையாளருக்கு சிறப்பு கேடயம்!



ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட கோபி நகராட்சி ஆணையாளருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு கேடயம் வழங்கி பாராட்டினார்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் தினந்தோறும் 18 டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் 11 டன் வரை மக்கும் கழிவுகள் சேர்க்கப்படுகிறது. 7 டன் மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் மறுசுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கழிவுகள் 2 டன் வரை சேகரிக்கப்படுகிறது.

இந்த வகையான கழிவுகளை சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளுக்காக அனுப்பப்படுகிறது. அவ்வாறு சிமெண்ட் ஆலைக்கு அனுப்பும் பொழுது அவற்றை பண்டல்களாக கட்டி அனுப்ப வேண்டியுள்ளது. இதற்கு நகராட்சியில் ஒரே ஒரு ஹைட்ராலிக் இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கூடுதலாக ஒரு இயந்திரம் தேவைப்பட்டது.

இந்த நிலையில் ஈக்வடாஸ் வங்கி நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பாக ரூ1.60 லட்சம் செலவில் புதிய ஹைட்ராலிக் பேலிங் இயந்திரம் ஒன்று வாங்கி வழங்கியுள்ளார்கள். மேற்படி இயந்திரத்தை ஈக்விடாஸ் வங்கி மண்டல வணிக மேலாளர் ஜெகன் மற்றும் தினேஷ்குமார், ஈக்விடாஸ் வங்கி கிளை மேலாளர் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் வங்கி அதிகாரிகளுடன் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி நகராட்சி துப்புரவு அலுவலர் பொறுப்பு செந்தில்குமார் துப்புரவு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் கோபிசெட்டிபாளையம் அனைத்து வணிகர் சங்க தலைவர் வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடார்ந்து, கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக நகராட்சி ஆணையாளருக்கு சிறப்பு கேடயம் ஈக்விடாஸ் வங்கி சார்பாக வழங்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like