1. Home
  2. தமிழ்நாடு

3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சிறப்பு சலுகைகள்.. சீனா அறிவிப்பு !

3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சிறப்பு சலுகைகள்.. சீனா அறிவிப்பு !


உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வருகிறது. தற்போது அந்த நாட்டின் மக்கள் தொகை 1.41 பில்லியன் என்ற கணக்கில் உள்ளது. சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற மக்கள் கணக்கெடுப்பின்படி கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே அந்த நாட்டில் மக்கள் தொகை அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2025ஆம் ஆண்டே சீனாவின் தற்போதைய மக்கள் தொகையை இந்தியா தாண்டும் என்று கூறப்படுகிறது.

3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சிறப்பு சலுகைகள்.. சீனா அறிவிப்பு !

இந்த நிலையில், சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை சரிகட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.

இந்த நிலையில் சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.

3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சிறப்பு சலுகைகள்.. சீனா அறிவிப்பு !

பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மகப்பேறு விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தாய்மார்களை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கு விடுமுறை அதிகரிப்பது போன்ற தம்பதிகளுக்கு அதிகரித்த விடுமுறை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like