எமிரேட்ஸ் விமானங்களில் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி!

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சார்பில் வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பயணக் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி, அதிக சுமைகளுக்கு தள்ளுபடி மற்றும் பயணத்திற்கு 7 நாள் முன்பு வரை இலவசமாக தேதியை மாற்றலாம் என ஏர்லைன்ஸின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் வேறு நாடுகளுக்கு சென்று பயிலும் மாணவர்கள் தங்களின் குடும்பத்தினரை அதிகம் சந்திக்க முடியும். மேலும், பயணத்தின் போது மாணவருடன் பயணம் செய்யும் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கும் இந்த சலுகை தரப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சலுகையில் முன்பதிவு செய்பவர்கள் அக்டோபர் 31, 2020க்குள் செய்யவேண்டும், அனைத்து பயணச் சீட்டுகளும் அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை செல்லுபடியாகும் என தெரிவித்தனர்.