இந்த தேதியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து..!
அக்டோபர் 3 முதல் 12 வரை சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3 முதல் 12-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.
பிரம்மோற்சவத்தின் போது சாமியின் வாகன சேவையை காண பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் வருவார்கள். அவர்களுக்கு திருப்திகரமாக தரிசனம் செய்து வைக்கும் வகையில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 3-ந்தேதி (அங்குரார் ப்பணம் ) முதல் 12-ந் தேதி (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) வரை தினமும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் வி.ஐ.பி. தரிசனம் அதிகாரி பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.