1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் தமிழகத்தில் காலியாகவுள்ள 135 மருத்துவ இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு..!

1

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு குழுவின் (MCC) மூலம் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தேர்வு குழுவின் (TN Medical Selection) மூலம் நிரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி, தனியார் கல்லுரிகளின் இருக்கும் அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி அன்று தொடங்கியது. அதனைத்தொடந்து, மொத்தம் 4 சுற்றுகள் முடிவடைந்துள்ளது.

எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் இடங்களுக்கான நான்காம் சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லூரியில் 1 எம்.பி.பி.எஸ் இடமும், 23 பி.டி.எஸ் இடங்களும் இருப்பதாக தெரிவித்தார். அதே போன்று, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் 4 பி.டி.எஸ் இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 67 எம்.பி.பி.எஸ் இடங்களும், தனியார் பல்கலைகழகங்களில் 61 இடங்களும், பல் மருத்துவக் கல்லூரிகளை பொறுத்தவரை அரசு கல்லூரிகள் 23 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 13 இடங்களும் என மொத்தம் 296 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களை நிரப்புவதற்கு 4 சுற்று கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இன்னும் 7 எம்.பி.பி.எஸ் மற்றும் 28 பி.டி.எஸ் இடங்கள் உள்ளன. இதனிடையே அன்னை மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 50 மருத்துவ இடங்களுக்கும், எம்ஜிஆர் மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் மொத்தம் காலியாகவுள்ள மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 135 ஆக உள்ளது. இந்த இடங்களை நிரப்பும் பொருட்டு சிறப்பு கலந்தாய்வு நடத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 25-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை சிறப்பு கலந்தாய்வு நடைபெறும். மாணவர்கள் https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் கலந்தய்வு குறித்த விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு இடங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர், ஒதுக்கபப்ட்ட கல்லூரியில் மாணவர்கள் சேரவில்லை என்ற கட்டப்பட்ட கட்டணம் திரும்பி செலுத்தப்படாது. அதே போன்று, திரும்ப பெற்றதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். குறிப்பாக சிறப்பு கலந்தாய்வில் கலந்துகொண்டு இடம் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேரவில்லை என்றால், 1 கல்வி ஆண்டிற்கு மீண்டும் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவ கலந்தாய்விற்கு பதிவு செய்து மருத்துவ இடங்கள் கிடைக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like