1. Home
  2. தமிழ்நாடு

தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு – உத்தரவை மீறுகிறதா கல்வி துறை..?

1

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இது தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவும் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்தவித பயிற்சியோ, சிறப்பு வகுப்புகளோ நடத்த கூடாது என தலைமை செயலாளர் உதவிட்டார். இருப்பினும் அரசின் உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவை பள்ளி கல்வித்துறையே மீறுவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like