ஜனவரி 22-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்..!!

தமிழ்நாட்டில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் பொங்கல் அன்று விடுமுறை என்பதால் தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. 19-வது தடுப்பூசி முகாம் வருகிற ஜனவரி 22-ல் (சனிக்கிழமை ) நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.