1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

1

அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது வார இறுதி நாட்களான வரும் மார்ச் ஒன்று மற்றும் இரண்டு அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துக்களுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ,கோயம்புத்தூர், சேலம் ,ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 245 பேருந்துகளும் சனிக்கிழமை 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூர், ஓசூர், நாகை, ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 51 பேருந்துகளும், சனிக்கிழமை 51 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மேலும் மாதவரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை 20 பேருந்துகள் சனிக்கிழமை 20 பேருந்துகள் என மொத்தம் 627 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக இருக்க பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி, கல்லூரி, ஐடி நிறுவன ஊழியர்கள் என அனைவரும் பல்வேறு பகுதிகளில் இருந்தே சென்னையில் வந்து தங்கி உள்ளனர். விடுமுறை நாட்களின் பொழுது சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அவ்வாறு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் தேவைகளுக்காக சிறப்பு பேருந்துகள், கூடுதல் ரயில்கள் என வாரம் தோறும் இயக்கப்பட்டு வருகின்றது, தற்போது இந்த வாரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like