1. Home
  2. தமிழ்நாடு

விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டி கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..!

1

சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 40 நாள் பயணத்துக்கு பிறகு, விண்கலம் தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது. சந்திரயான் 3ன் பயணம் வெற்றியடைய வேண்டி ஜூலை மாதம் திருமலை திருப்பதிக்கு விஞ்ஞானிகள் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

இந்நிலையில்,  உலகத்தில் உள்ள அனைவரின் கண்களும் நிலவை நோக்கி உள்ளது காரணம் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் இன்று புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான்-3 நிலவில் சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்கம் செய்யப்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் அனைத்து மதங்களைப் பின்பற்றும் மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 


 


 

Trending News

Latest News

You May Like