இனி சபரிமலை வரும் சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு அடையாள பட்டை!
சபரிமலை சீசன் துவங்கி உள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்குச் சிறப்பு அடையாள பட்டைகள்(ஐ.டி., பேண்ட்ஸ்) ஏற்பாடு செய்துள்ளோம். 10 வயதுக்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு செல்லும்போது வழங்கப்படும்.
இந்தச் சிறப்பு அடையாள பட்டையில், குழந்தைகளுடன் வரும் பெற்றோர் அல்லது பெரியவர்களின் பெயரும் மொபைல் எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதன் முக்கிய நோக்கம், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்ட நேரத்தில், விரைவாக அனுப்பவும், ஒருவேளை காணாமல் போகும் சூழ்நிலையில், அவரவர் பெற்றோர்கள், காப்பாளர்களுடன் அனுப்புவதற்கு எளிதாக இருக்கும்.
பெற்றோர் தரிசனம் முடிந்து பாதுகாப்பாக, திரும்ப வரும் வரையில் யாரும் இந்தச் சிறப்பு அடையாள பட்டையைக் கழற்றிவிட வேண்டாம் என் கேட்டுக்கொள்கிறோம்.