ராமர் குறித்து பேசிய தமிழக அமைச்சர் : ராமர் இருந்ததற்கான வரலாறும் கிடையாது. ஆதாரமும் கிடையாது.!
அரியலூரில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில்,கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஷ்வரர் ஆலயத்தில் ஆடித் திருவாதிரை அரசு விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் கண்ணன், எம்.எல்.ஏ. சின்னப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜேந்திர சோழனுக்கு மூன்றாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. ஆனால், ராமர் இருந்ததற்கான வரலாறும் கிடையாது. ஆதாரமும் கிடையாது. ராமரைப் பற்றி பேசுபவர்கள்கூட அவரை அவதாரம் என்றுதான் கூறுகின்றனர். அவதாரம் என்றால் பிறக்க முடியாது. கடவுளாக பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது.
நமது வரலாற்றை மறைத்து, நம்மை மயக்கி வேறு ஒரு வரலாற்றை உயத்திக் காட்டுவதற்காக இந்த செயலை எல்லாம் செய்கின்றனர். ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கோயில்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆதாரமாக உள்ளன. ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள் என்று பேசினார்.
இந்நிலையில், போக்குவரத்து துமைச்சர் சிவசங்கரின் தற்போதைய பேச்சு கடும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
“ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது ஆதாரமும் கிடையாது - அமைச்சர் சிவசங்கர்#Sivasankar | #RajendraChola | #Ramar pic.twitter.com/xPL6QQBWab
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 2, 2024