ரூ.50 ஆயிரம் அபராதம் - தெற்கு ரயில்வே..!! நடவடிக்கை
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சென்றுக்கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில், பயணிகளுக்கு வழக்கம் போல் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் சாம்பாரில் வண்டுகள் செத்து கிடந்துள்ளதை கண்டு பயணி ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பயணி ரயில்வே ஊழியர்களிடம் புகார் அளித்தார். ஆனால், இது வண்டு இல்லை, சாம்பாரில் உள்ள சீரகம் என்று ரயில்வே ஊழியர் மழுப்பல் பதில் அளித்தார்.
இதையடுத்து, சீரகத்தில் எப்படி தலை, கால்கள், வால் அனைத்தும் இருக்கும் என அதிகாரிகளிடம் பயணிகள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாம்பாரில் இறந்து வண்டுகள் மிதந்து இருப்பதை பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. வீடியோவில் ரயிலில் பயணம் செய்த பயணி, 'என் பெயர் முருகன், நான் நாங்குநேரியில் இருந்து வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்கிறேன்.
காலை உணவு வழங்கினர். அதில், சாம்பாரில் 3 வண்டுகள் இருந்தது. அதனை சக பயணாளிகளிடம் தெரிவித்தேன். தொடர்ந்து, இது குறித்து நான் ஊழியரிடம் கூறுகையில் அது வண்டு இல்லை, சீரகம் என்றேன் இதனையடுத்து, நாங்கள் அது வண்டு என்பதை உறுதி செய்ததை அடுத்து அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
வந்தே பாரத் ரயிலில் உணவிற்காக மட்டும் ரூ.200 வசூல் செய்கின்றனர். மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இத்தைகைய ரயிலில் வழங்கப்படும் உணவு, பயனுள்ளதாக இல்லை. தரமான உணவை வழங்க வேண்டும். இது குறித்து மத்திய அமைச்சகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறினார்.
வண்டு இருப்பதாக கூறி, பயணி வெளியிட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து, உணவு விநியோகம் செய்த நிறுவனத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் தெற்கு ரயில்வே அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.