1. Home
  2. தமிழ்நாடு

மதுரை கோட்டத்தில் 25 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே..!

1

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தூத்துக்குடியிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு வாஞ்சி மணியாச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.06847) வரும் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 3.10 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06848) வரும் 12-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. 

நெல்லையிலிருந்து காலை 7.25 மணிக்கு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06673) 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து காலை 8.15 மணிக்கு நெல்லை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (06674) 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ரத்தாகிறது.

நெல்லையிலிருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06675) 11, 15 மற்றும் 17 முதல் 21-ம் தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06676) 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

இதே போல, நெல்லையிலிருந்து மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06677) 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து மாலை 6.15 மணிக்கு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06678) வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி மற்றும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது.

நெல்லையிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06409) 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து காலை 7.20 மணிக்கு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06405) 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

மேலும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06679) வரும் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும், திருச்செந்தூரிலிருந்து மதியம் 2.10 மணிக்கு வாஞ்சி மணியாச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06680) 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நெல்லையிலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06668) 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும், தூத்துக்குடியிலிருந்து மாலை 6.25 மணிக்கு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06667) 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. செங்கோட்டையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06684) 15-ம் தேதி மற்றும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும், நெல்லையிலிருந்து காலை 7 மணிக்கு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06684) 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06686) 15-ம் தேதி மற்றும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும், நெல்லையிலிருந்து மதியம் 1.50 மணிக்கு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06687) 15-ம் தேதி மற்றும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

நாகர்கோவிலில் இருந்து மாலை 7.50 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06641) 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும், நெல்லையிலிருந்து காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06642) 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (06012) வரும் 17, 18 ஆகிய தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (06011) 16, 18 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. 

நெல்லையிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06030) 18-ம் தேதியும், மேட்டுபாளையத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06029) 19-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. 

புனலூரிலிருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06639) 15-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like