1. Home
  2. தமிழ்நாடு

8 சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே அறிவிப்பு..! இன்று காலை முன்பதிவு தொடக்கம்..!

1

ரயில் எண். 07119 - செகந்திராபாத்தில் இருந்து செப். 13(வெள்ளி) மாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில், குண்டூர், காட்பாடி, சேலம், கோவை, கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு மறுநாள் இரவு 11.20-க்கு சென்றடையும். அதேபோல், மறுவழித்தடத்தில் ரயில் எண். 07120 - கொல்லத்தில் இருந்து செப். 15 (ஞாயிறு) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் ரயில், அதே வழியாக திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

ரயில் எண். 07333 - ஹூப்ளியில் இருந்து செப். 13 காலை 6.55 மணிக்கு புறப்படும் ரயில், அர்சிகெரே, பங்காரப்பேட்டை, சேலம், கோவை, கோட்டயம் வழியாக கொச்சுவேலிக்கு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும். அதேபோல், மறுவழித்தடத்தில் ரயில் எண். 07334 கொச்சுவேலியில் இருந்து செப். 14 பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளியை மறுநாள் 12.50-க்கு சென்றடையும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

ரயில் எண். 06071 - கொச்சுவேலியில் இருந்து நிஜாமுதினுக்கு செப். 20, 27, அக். 4, 11, 18, 25, நவ. 1, 8, 15, 22, 29 தேதிகளில்(வெள்ளி) பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில், கோட்டயம், கோவை, காட்பாடி, விஜயவாடா, நாக்பூர், குவாலியர் வழியாக நிஜாமுதினுக்கு ஞாயிறுதோறும் இரவு 8.40 மணிக்கு சென்றடையும். அதேபோல், மறுவழித்தடத்தில் ரயில் எண். 06072 - நிஜாமுதினில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை பகல் 12.53 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண். 06077 - சென்னை சென்ட்ரலில் இருந்து செப். 21, 28, அக். 5, 12, 19, 24, நவ. 2, 9, 16, 23, 30 தேதிகளில்(சனிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, விஜயவாடா, புவனேஷ்வர், பாலசோர் வழியாக சந்திராகாஜிக்கு திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு சென்றடையும். அதேபோல், மறுவழித்தத்தில் ரயில் எண். 06073 - சந்திராகாஜியில் இருந்து திங்கள்கிழமைகளில் காலை 10 மணிக்கு புறப்பட்டு, அதே வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை பகல் 3.30 மணிக்கு சென்றடையும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப்.12) காலை 8 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.

Trending News

Latest News

You May Like