தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு (Han Kang) இந்த விருது வழங்கப்பட உள்ளது. “வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் அகாடமி அறிவித்துள்ளது.
தென் கொரியாவின் க்வாங்ஜு பகுதியில் 1970ஆம் ஆண்டுப் பிறந்தவர் ஹான் காங். தன்னுடைய 9ஆம் வயதில் குடும்பத்தோடு சியோல் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். இலக்கியப் பின்னணியிலிருந்து வந்த இவரின் தந்தை, புகழ்பெற்ற நாவல் ஆசிரியர் ஆவார். எழுதுவதோடு இல்லாமல், கலை, இசை சார்ந்தும் இயங்கி வருகிறார். இது அவரின் இலக்கிய ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாக அமைகிறது என்று நோபல் அகாசமி புகழாரம் சூட்டி உள்ளது.