1. Home
  2. தமிழ்நாடு

தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் நடிகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை..!

1

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பாக சங்கத்தின் மூத்த உறுப்பினர்களிடம் ஆலோசனை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இன்று, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றனர்.

இது தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் ஆகியோர் இன்று (ஜூலை 1) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அவர்களிடம் ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில் அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள். வேகமாக நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த ரஜினிகாந்த் விரைவில் நேரில் வந்து கட்டிடப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1

Trending News

Latest News

You May Like