1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : இந்திய வேகத்தில் சரிந்த தெ.ஆப்ரிக்கா - W W W W W W W W - 55 ரன்களுக்கு ஆல் அவுட்..!

1

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்று கேப்டவுன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் எல்கர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தெ.ஆப்., அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதனால், அந்த அணி 19 ஓவர்களில் 46 ரன்களுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறி, விளையாடி வந்த நிலையில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. 


 

Trending News

Latest News

You May Like