வினேஷ் போகத்துக்கு சவுரவ் கங்குலி ஆதரவு!
தகுதிநீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார். தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம்.
இந்நிலையில், கொல்கத்தாவில் சவுரவ் கங்குலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு சரியான விதி தெரியாது, ஆனால் அவள் இறுதிப் போட்டிக்கு வந்தபோது, அவள் சரியாக தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.எனவே நீங்கள் இறுதிப்போட்டிக்குச் செல்லும்போது, அது தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம்.தவறாக தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும், இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்திற்காவது அவர் தகுதியானவர் என தெரிவித்தார்.