விஷ்ணுவுக்கு சௌந்தர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி..!
சவந்தர்யாவை பார்க்க அவரின் பெற்றோர் வந்துவிட்டு போனார்கள். இந்நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சவுந்தர்யாவின் காதலரான முன்னாள் போட்டியாளர் விஷ்ணு விஜய்யை அழைத்து வந்திருக்கிறார் பிக் பாஸ்.
காதலை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல் இருந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் தங்கள் உறவை உறுதி செய்வார்கள் என்று பார்த்தால் வேறு மாதிரி நடந்துவிட்டது. ஐ லவ் யூ டா, ஐ லவ் யூ டினு சவுந்தர்யாவும், விஷ்ணு விஜய்யும் சொல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சவுந்தர்யாவோ ஒருபடி மேலே போய் என்னை திருமணம் செய்து கொள்வியா என ஒரு தட்டில் எழுதி அதை விஷ்ணு விஜய்யிடம் காட்ட அவருக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. நான் உன்னை சர்பிரைஸ் பண்ணலாம்னு வந்தால் நீ எனக்கு சர்பிரைஸ் கொடுத்துட்டியே. எனக்கு பேச்சே வரவில்லை என ஒரு மாதிரியாகிவிட்டார் விஷ்ணு விஜய்.
என்னை கல்யாணம் செய்து கொள்வாயா என ஆண்கள் தான் கேட்கணும் என்று இல்லை பெண்களும் கேட்கலாம் என களத்தில் இறங்கிவிட்டார் சவுந்தர்யா. அவரின் இந்த செயல் பல பசங்களுக்கு பிடித்துவிட்டது.
பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு திருமண ப்ரொபோசல் நடந்திருக்கிறது. தன் முதல் காதல் தோல்வி அடைந்தது பற்றி சவுந்தர்யா தெரிவித்தார். இந்நிலையில் விஷ்ணு விஜய்யை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார் என்றால் இந்த காதல் அவரின் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. ஒரு காதல் தோல்வி அடைந்த பயத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்காமல் தைரியமாக ஒரு முடிவு எடுத்த சவுந்தர்யாவை அவரின் ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்..
#Day82 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) December 27, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/YfTAxXEpOX
#Day82 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) December 27, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/YfTAxXEpOX