மன்னிப்பா..! - அதற்கு வாய்ப்பே இலலை.. - திவ்யா சத்யராஜ் அதிரடி !

இந்தியாவின் மிகச்சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். 2019 ஆம் ஆண்டு சிறந்த ஊட்டச்சத்து நிபுணருக்கான இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது சமூகவலைதளங்களில் வைரலானது. அவ்வப்போது சமூக கருத்துகள் கூறி வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக எதிர்ப்பு எழுந்த நிலையில் மன்னிப்புக் கேட்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திவ்யா சத்யராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரதயாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. எனவே ரதயாத்திரையை அனுமதிப்பது நியாயம் கிடையாது.
தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன். மதத்தை வளர்க்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல்நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ரதயாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை. இவ்வாறு திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
newstm.in