1. Home
  2. தமிழ்நாடு

சூரியின் ‘விடுதலை-2’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..!

Q

கடந்த ஆண்டு வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.

சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘விடுதலை-2’ படத்தின் மேக்கிங் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like