1. Home
  2. தமிழ்நாடு

ஜீ 5 தமிழ் டிவியி ஒளிபரப்பாகும் சூரியின் மாமன்..!

Q

சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண் நடிப்பில் வெளியான படம் மாமன்.

தாய் மாமனுக்கும், அக்கா மகனுக்குமிடையிலான பாசத்தை மையமாக கொண்ட கதையில் உருவான இந்த படம் சூரிக்கு வெற்றி படமாக அமைந்தது. இதை அடுத்து தற்போது மண்டாடி என்ற படத்தில் மீனவராக நடிக்கிறார் சூரி. மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்கி வருகிறார்.

சத்யராஜ், மகிமா நம்பியார், சுகாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் சூரி நடித்து மே 16ம் தேதி திரைக்கு வந்த மாமன் படம் விரைவில் ஜீ5 ஓடிடி தளம் மற்றும் ஜீ 5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எப்போது வெளியீடு என்று ஜீ5 நிறுவனம் தெரிவிக்கவில்லை.


 


 

Trending News

Latest News

You May Like