சூரி நடிப்பில் மிரட்டும் கொட்டுக்காளி ட்ரெய்லர்!
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற படம் ‘கூழாங்கல்’. 94-வது ஆஸ்கர் விருதுக்கும் இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த படம் முற்றிலும் வேறுபாட்டு முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையம்சம் கொண்டதாகவும் சூரியின் வித்தியாசமான நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தும் அமைந்துள்ளது படமாகவும் என்பதை ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.
அதிக அளவு வசனங்கள் இல்லாமல் காட்சிகள் மூலம் கதையை புரிய வைக்கும் அளவுக்கு வித்தியாசமாக
இயக்குனர் வினோத் ராஜ் இயக்கி உள்ளார்.