விரைவில் X தளத்தில் இ-மெயில் செய்யலாம்..!
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முக்கியமான ஒருவர் தான் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் – எக்ஸ் விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றின் நிறுவனர் எலான் மஸ்க். இவர் கடந்த 2022-ம் ஆண்டு உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் தன்வசப்படுத்தினார்.
அன்று முதல் புதிய நடவடிக்கைகளை அவர் எடுத்துதான் வருகிறார். முதல் நடவடிக்கையாக பல வருடங்களாக டிவிட்டர் என்று இருந்த பெயரை எக்ஸ் தளம் என்று மாற்றினார். அதன் பிறகு பல புதிய அப்டேட்களை கொண்டு வந்தார். இந்நிலையில் தான் தற்போது மிகப்பெரிய அப்டேட் ஒன்றை இவர் இந்த எக்ஸ் தளத்தில் கொண்டு வர உள்ளார். இந்த அப்டேட் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது. நாம் இந்த புதிய அப்டேட்டின் மூலம் எக்ஸ் தளத்தில் ஜிமெயிலை பயன்படுத்தலாம்.
தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்த வந்த இவர் சமீபத்தில் எக்ஸ் தளத்தில் அவரின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், விரைவில் எக்ஸ் இ-மெயில் சேவை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த நடவடிக்கை கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. எனவே விரைவில் எக்ஸ் தளத்தில் மின்னஞசல் சேவையை எதிர்ப்பார்க்கலாம்.
எக்ஸ் நிறுவனத்திகள் செக்யூரிட்டி இன்ஜினியர் குழுவில் பணியாற்றி வரும் நாதன் மெக்ராடி, எக்ஸ்-மெயிலை எப்போது அறிமுகம் செய்யப் போகிறோம் என ட்வீட் செய்திருந்தார். ‘Its Coming’ என அதன் வரவு குறித்து மஸ்க், பதில் ட்வீட் செய்துள்ளார். அது இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
When we making XMail?
— Nate (@natemcgrady) February 22, 2024